போகர் சப்தகாண்டம் 1571 - 1575 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1571 - 1575 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1571. ஆமேதான் சித்தர்முனி ரிஷிகள்சாபம் அப்பனே முன்னின்று வகற்றவேண்டும்
போமேதான் குருபதத்தை வணங்கவேண்டும் வணங்காட்டால் காயுமில்லை பூவுமில்லை
வேமேதான் சித்தருடன் வாதுபேசி வேதாந்த தாயினது வருளினாலே
நாமேதான் காலாங்கி வரமும்பெற்று நாட்டினிலே மாணாக்கள் பிழைக்கத்தானே

விளக்கவுரை :


1572. பிழைக்கவென்று சீனபதிசென்று மேதான்பிழைமோசம்நேராமல் கருவாய்கண்டு
தழைக்கவே தாரிணியில் பிழைக்கவென்று தடுமாற்றம் வாராமல் மைந்தாயானும்
பழக்கமுடன் கிட்டிருந்து தொண்டுசெய்து பலகாலுங் கைமறைப்பை பழுதாராய்ந்து
வழக்கமுடன் சீனம்விட்டு வந்தேனே தெட்சணத்தில் பாதைதாமே

விளக்கவுரை :

[ads-post]

1573. பாதையால் வந்துனக்கு பாகஞ்சொன்னேன் படுங்காளி முழுமங்களானபேரை
வாதையுடன் தானகற்றி தூரத்தள்ளி வளர்ப்பமுடன் கைமசக்கு யாருங்காணார்
வேழைமுக முன்னிருந்து சித்தன்போல மேதினியில் துஷிடர்களை யகலத்தள்ளி
கோதையென்னுஞ் சமுசார மாய்கைநீக்கி குணமுடனே யிவ்வேதை செய்வாய்தானே

விளக்கவுரை :


1574. செய்குவாய்ப் பராணாயந்தன்னில்நின்று சிறப்புடனே சிதானந்தம் பாசம்நீக்கி
உய்குவாய் சடாட்சரத்தை உச்சரித்து வுத்தமனே சுடரொளியைக் கண்டுபோற்று
வைகுவார் தன்னைமனமெதிர் நோகாமல் வாசவனே முன்னிருந்து வம்பாள்பாதம்
மைகுடனே வம்பரத்தை மேலேகும்பி வரமுடனே வாழ்கவென்று வசனித்தேனே

விளக்கவுரை :


1575. வசனித்தே னின்னமொரு கருமானங்கேள் வாகுடனே மாணாக்கள் பிழைக்கவென்று
தூசனித்த பாஷாணம் பலமொன்றாகும் துடியான சிப்பியென்ற சுன்னந்தானும்
பசனித்த சுக்கான்தன் சுண்ணந்தன்னை பாகுடனே பாஷாணத்தங்கிபூட்டி
நிசினித்து சட்டியிலே மணல்தான்கொட்டி நிறையவே மணலாகில மூடிப்போடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar