போகர் சப்தகாண்டம் 1576 - 1580 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1576 - 1580 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1576. போடவே நாற்சாம மெரித்தபோது பொங்கமுடன் தீயாறி யெடுத்துப்பாரு
நாடவே பாஷாணஞ்சுத்தியாச்சு நலமான கட்டிதனை யெடுத்துக்கொண்டு
மூடவே வெள்ளியென்ற ரேக்குதன்னால் முறைப்படியே பாஷாணத்தங்கிபூட்டி
மாடவே சாரையென்ற சர்ப்பந்தன்னால் மார்க்கமுடன் தானெடுத்து கொழுப்பை வாங்கே

விளக்கவுரை :


1577. வாங்கியே கொழுப்புநிகர் வீரஞ்சேர்த்து வாகுடனே பாஷாணஞ் சுருக்குதாக்கு
தேங்கியே போகாமல் மெழுகுபண்ணு தெளிவான செம்புதனை வெள்ளிபண்ணு
ஓங்கியே யச்செம்பு நாலுக்கொன்று வுத்தமனே மெழுகெடுத்து குருவொன்றீய
ஏங்கியே திரியாதே மைந்தாகேளு யெழிலான வித்தையது வதீதங்காணே  

விளக்கவுரை :

[ads-post]

1578. காணவே வெள்ளியென்ற செம்புதன்னில் கருவான வெள்ளியது நாலுக்கொன்று
பூணவே தான்சேர்த்து வுருகிப்பாரு புண்ணியனே துய்யனுக்கிணைவேறுண்டோ
தோணவே பாஷாணமிகவேதிக்கும் துறைகோடி முறைகோடி தொந்தங்கோடி
நாணவே சித்தரகள்தான் செய்யுமார்க்கம் நலமுடனே மானிலத்தில் செய்யலாச்சே

விளக்கவுரை :


1579. செய்யவே யின்னமொரு மார்க்கங்கேளு தெளிவான தாளகமும் பலமொன்றாகும்
நையவே துருசுடனே சாரநீரால் நவிலவே தானரைத்து மெழுகுபண்ணு
துய்யவே தாளகத்துக்கங்கிபூட்டி துடியுடனே சுண்ணாம்புச்சீலைசெய்து
பையவே கொழியென்ற புடத்தைப்போடு பாங்கான தாளகமும் கட்டிப்போமே

விளக்கவுரை :


1580. போமென்று விடுகாதே பூபாகேளு புகலுவே னின்னமோரு மார்க்கம்பாராய்
காமென்ற கடுக்கார்சீனமொன்று கலறவிட்டு ஜெயநீரா லரைத்துமேதான்
வேமென்ற தாளகத்துக் கங்கிபூட்டி விரைவுடனே சுண்ணாம்பு சீலைசெய்து
பாமென்ற வெயில்தனிலே காயவைத்து பாலகனே கோழியென்ற புடத்தைப்போடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar