போகர் சப்தகாண்டம் 1581 - 1585 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1581 - 1585 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1581. போடவே தாளகமுஞ் சிவந்துமின்னும் போக்கான சரக்கதுவும் கட்டிப்போகும்
நீடவே வங்கமது போலேகாணும் நீணிலத்தில் வாதிமெச்சும் வங்கமாச்சு
கூடவே வங்கமதை தானெடுத்து குறிப்புடனே காரமது காலாய்ச்சேர்த்து
போடவே மூசைதனிலுக்கித்தீரு பொங்கமுடன் தாரத்தின் வங்கமாமே  

விளக்கவுரை :


1582. வங்கமென்றால் வங்கமது சொல்லப்போமோ வளவான தாரத்தின் வங்கமாகும்
பங்கமொன்றுஞ் சொல்லாத வங்கமாகும் படுமுன்னே சூதத்தைக் கட்டிக்கொள்ளும்
தங்கமென்ற லோகமதை சரியாய்க்கூட்டித் தாக்கிடவே தங்கமது வங்கமாகும்
அங்கமுடன் தங்கமது வங்கமானால் அவனியிலே வாதவித்தை பார்க்கப்போமோ

விளக்கவுரை :

[ads-post]

1583. போமென்று விடுகாதே மைந்தாகேளு பொங்கமுடன் கெந்தியது நாலுக்கொன்று
வேமென்ற சிலையதுவு மொன்றேயாகும் மிக்கான காரமதுவொன்றேயாகும்
பாமென்ற வீரமது வொன்றேயாகும் சடுக்கான வளையலுப்பு வொன்றேயாகும்
யாமென்ற படிகாரமொன்றேயாகும் பாங்குடனே விவையெல்லாம் ஒன்றாய்க்கூட்டே

விளக்கவுரை :


1584. கூட்டியே தானரைப்பாய் ஜெயநீர்கேளு குறையாத சாரமென்ற ஜெயநீர்தன்னால்
தாட்டிகமாய் தானரைப்பாய் நாலுசாமம் சட்டமுடன் ரவிதனிலே காயப்போடு
நீட்டமுடன் சரக்கதனை பொடிதாக்கி நிலவரமாய் குழிக்கல்லில் பொடித்துக்கொண்டு
வாட்டமுடன் காசியென்ற குப்பிகொண்டு வளமான சீலையது வேழுசெய்யே

விளக்கவுரை :


1585. செய்யவே காசிபென்ற மேருதன்னில் சிறப்புடனே மருந்தெல்லாங் குகையிலிட்டு
பையவே மரக்காலால் கொண்டுமூடி பாங்குடனே சீலையது வலுவாய்செய்து
மையவே சட்டிதனில் மணல்தான்கொட்டி மார்க்கமுடன் மேல்சட்டி கொண்டுமூடு
துய்யவே சீலையது வலுவாய்ச்செய்து தோராம வாலுகையிலேற்றிடாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar