போகர் சப்தகாண்டம் 1586 - 1590 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1586 - 1590 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1586. ஏற்றவே சாமமது யிருபதாகும் யெழிலான தீமூட்டி யெரித்தாயானால்
மாற்றமுடன் செந்தூரமென்ன சொல்வேன் மயங்காதே வருண்மைந்தா புகலக்கேளு
சீற்றமென்ற செம்புதனில் பத்துக்கொன்று திறமுடனே தானுருக்கிக் கொடுத்துப்பாரு
கூற்றமென்ற வூரலதுயெங்கேபோச்சு குணமான செம்பதுவு மாற்றமாச்சே

விளக்கவுரை :


1587. மாத்தான பொன்னதுவும் பசுமைமெத்த மண்டலத்தி லார்செய்யப்போராரப்பா
நீத்தான சித்தர்முனி செய்வாரப்பா நேர்மையுடன் கருவாளி செய்வான்பாரு
கூத்தான கூத்துவிது சித்தர்கூத்து குவலயத்தில் முழுமக்கள் செய்யமாட்டார்
நாத்தான நாதாக்கள் செய்யமார்க்கம் நலமுடனே யங்களுக்காக வுரைத்திட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

1588. உரைத்திட்டேன் காலாங்கிதனைநினைத்து உத்தமனே ஒருகோடி நூலைப்பார்த்து
நிரைத்திட்டேன் சாத்திரத்தி னுளவையெல்லாம் நேர்மையுடன் பிழைக்கவென்று யானுஞ்சொன்னேன்
குரைத்திட்டேன் சித்தர்சொன்ன நூலையானும் குவலயத்தில் பிழைப்பதற்கு காண்டஞ்சொன்னேன்
உரைத்திட்டே னேழுலட்சங் கிரந்தந்தன்னை யேழைகட்கா யிரக்கம் வைத்துபாடினேனே

விளக்கவுரை :


1589. பாடினே னேழாயிரச் சத்தகாண்டம் பாங்குபெற சிமிழ்போல பாடிவைத்தேன்
தேடியே பார்த்தாலும் கிடைக்குமோசொல் தேசத்தில் கிட்டாது சிவயோகிக்கு
நாடிநூல்தானும் கிட்டும்பாரு நரகில்விழும் பாவியற்குக் கிட்டுமோசொல்
கூடியே சீனபதி சென்றுயானும் குறிப்புடனே பாடிவிட்டேன் மர்மந்தானே

விளக்கவுரை :


1590. தானான வின்னமொரு போக்குகேளு தாக்கான பித்தளைதான் சேர்தானொன்று
கோனான வச்சமென்ற தகடதாக்கி கோர்வையுடன் கடைசரக்கு சொல்லக்கேளு
பானான பாஷாணம் பலங்காலாகும் பதிவான தாளகமும் பலங்காலாகும்
வேனான லிங்கமது பலங்காலாகும் மிக்கான வீரமது பலங்காலாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar