போகர் சப்தகாண்டம் 1591 - 1595 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1591 - 1595 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1591. பலமான பூரமது பலல்காலாகும் பாங்கான கெவுரியது பலங்காலாகும்
நலமான சூடனது பலங்காலாகும் நாற்றமுள்ள கெந்தியது பலங்காலாகும்
சலமான ரசமதுதான் பலங்காலாகும் காந்தமுடன் மதியுப்பு பலங்காலாகும்
சலமான பூநீறு பலங்காலாகும் சார்பான இந்துப்பு பலந்தான்கூட்டெ  

விளக்கவுரை :


1592. கூட்டியே வறுவகை ஜெயநீர் தன்னால் குமரவே சரக்கெல்லா மொன்றாய்க்கூட்டி
தாட்டிகாமய் தானரைப்பாய் நாலுசாமம் தகமையுடன் தகடெல்லாம் பூசித்தீரு
வாட்டமுடன் ரவிதனிலே காயவைத்து வாகாகப் புடம்போட விபரங்கேளு
நீட்டமுடன் ஓடதனில் தான்பரப்பி நிலைமையுடன் கோழியென்ற புடத்தைப்போடே

விளக்கவுரை :

[ads-post]

1593. போடவே தீயாறியெடுத்துப்பாரு பொங்கமுடன் தகடதுதான் வதரேபோகும்
நீடவே குடவனென்ற தகட்டைதானும் நேர்பாக புடம்போட வூரல்போகும்
கூடவே சரக்கதனை தசபங்காக்கி குழம்பாகத் தான்குழப்பி தகட்டிற்பூசி
சாடவே புடம்போட குடவன்செம்பாம் சாங்கமுடன் வெள்ளிக்குத் தாக்கிடாயே

விளக்கவுரை :


1594. தாக்குவாய் வெள்ளிக்கு நாலுக்கொன்று தகமைபெற செம்பதனைக் கொடுத்துப்பாரு
நோக்கமுடன் வெள்ளியது வாறுகாணும் நொடிக்குள்ளே வாதவித்தை கைக்குள்ளாச்சு
பார்க்கவே மட்டமது சொல்லப்போமோ பசுந்தங்கம் இரண்டுக்கு வொன்றேசேரு
தூக்கமுடன் தடடடித்து புடத்தைப்போடு துளிரான தங்கமது விரங்கும்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar