போகர் சப்தகாண்டம் 1596 - 1600 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1596 - 1600 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1595. பாரேதா னின்னமொரு கருமானங்கேள் பசுந்தங்கம் இரண்டுதுலாம் பகர்ந்தெடுத்து
சேரேதான் மாசியென்ற பத்திரிதன்னால் செழுமையுடன் தானரைத்து புடத்தைப்போடு
நேராஏதான் பத்துமுறை போட்டாயானால் நெடிதான செந்தூரம் சொல்லப்போமோ
கூரேதான் செந்தூரங் குன்றியுண்ணு குணமாகும் மண்டலத்தில் வடிவுகாணே

விளக்கவுரை :


1596. காணவே தேகமது மின்னல்தோன்றும் கடிதான ரோகமெல்லாம் மகன்றுபோகும்
பூணவே தாதுகளும் வலுத்துகாணும் புரையோடுஞ் சிலவிஷயங்கள் அற்றப்போகும்
தோணவே நரைதிரையு மாறிப்போகும் தொடராது வாயுவென்ற வெண்பதும்போம்
மாணவே செந்தூரம் வெள்ளிசெம்பில் மாட்டடா பத்துக்கு வொன்று போடே

விளக்கவுரை :

[ads-post]

1597. போட்டுமே தானுருக்கி யெடுத்துப்பாரு புகழுடனே வேதிக்கும் பொன்னோமெத்த
நீட்டமுடன் கரியோட்டி லூதிப்போடு நிலையானத் தங்கமது கூறப்போமோ
வாட்டமுடன் தகடடித்துப் புடத்தைப்போடு வளமான பசுந்தங்க மாகும்பாரு
நாட்டமுடன் சிவயோகிக் குகந்தபொன்னாம் நலமான சித்தர்செய்யும் வேதையாமே

விளக்கவுரை :


1598. வேதையிலே யின்னமொரு கருமானங்கேள் விதமான பெரியகண்ணாகமப்பா
போதையிலே வெண்வங்கந் தன்னோடொக்க புகழான சூடனுடன் கெந்திதானும்
தீதையிலே கெவுரியுடன் தாரந்தானும் திறமான பூரமுடன் சரியதாகும்
பாதையிலே யித்தனையுங்கூட்டிமைந்தா பாங்குடனே பாங்குடனே குழியம்மி லாட்டிடாயே

விளக்கவுரை :


1599. ஆட்டவே குமரியுட பாலினாலே அப்பனே யெண்சாமமரைத்த போது
வாட்டமுடன் சரக்குடனே வங்கஞ்சேர்த்து வளமான செந்தூரத் தாதியாகும்
நீட்டமுடன் காசியென்ற குப்பிகொண்டு நேர்மையுடன் சீலையது வேழுசெய்து
மூட்டமுடன் மருந்தெல்லாம் குப்பிக்கேற்றி முனையான மரக்காலால் கொண்டுமூடே

விளக்கவுரை :


1600. மூடவே குப்பியென்ற வாயிற்சீலை முயலவே தான்செய்து முசியாமற்றான்
நீடவே சட்டிதனில் மணலைக்கொட்டி நினைவாகக் குப்பிதனை நடுவேவைத்து
சாடவே மேற்சட்டி கவிழ்த்துமூடி சாங்கமுடன் சீலையது வலுவாய்ச் செய்து
போடவே தீயதுதான் சாமம்பத்து பகழ்ச்சியாய் நீயெரிப்பாய் மைந்தாபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar