1601. பாரேதான்
தீயாறியெடுத்துப்பார்க்க பதனமா செந்தூர மென்னசொல்வேன்
சீரேதான் வெள்ளிசெம்பில்
பத்துக்கொன்று திறமாகத் தானுருக்கிக் கொடுத்துத்தீரு
நேரேதான் கரியோட்டில்
வூதிப்போடு நேர்ப்புடனே தங்கமது நாலுக்கொன்று
வாரேதான் சேர்த்துருக்கி
புடத்தைப்போடு மகத்தான வேதையிது சொல்லொண்ணாதே
விளக்கவுரை :
1602. சொல்லவே சித்தர்செய்யும்
வேதைமார்க்கம் ஜெகத்தினிலே மானிடர்கள் செய்வாரோதான்
பல்லவே கருவாளி செய்வான்பாரு
பூதலத்தில் முழுமக்கள் செய்யப்போமோ
வெல்லவே காலாங்கி நாதர்பாதம்
விருப்பமுடன் தாள்பணிந்து செய்யலுற்றேன்
நல்லதொரு ஞானவானாகவென்றால்
நானுரைத்த நூலதனை யறிவான்காணே
விளக்கவுரை :
[ads-post]
1603. தானான பிரகாசமான போகர்
சதகோடி சூரியர்போல் பிரகாசிப்பார்
கோனான குருவருளால்
தன்னைப்பார்த்து கூறுவேன் யின்னமொரு குருவைக்கேளாய்
வேனான அயமதுதான் ராவிமைந்தா
விபரமுடன் பழச்சாற்றில் வூறவைத்து
வூனான அமுரினால்
கழுவிப்போட்டு வுத்தமனே யதில்சேர்க்க மருந்துகேளே
விளக்கவுரை :
1604. கேளடா அயப்பொடிக்கு
ரெட்டிமைந்தா கெணிதமுடன் துருசுடனே காரமாகும்
வாளடா கெந்தகமும் சூடன்வீரம்
மார்க்கமாய் யப்பொடிக்கு நாலுக்கொன்று
கோளடா வாராமல்
யெல்லாங்கூட்டி குமுறவே சம்பழத்தின் சாற்றாலாட்டி
காளடா வச்சிரமாங் குகையில்வைத்து
கலங்காமல் வுலையில்வைத்து வூதிடாயே
விளக்கவுரை :
1605. ஊதிடவே அயமதுதான்
சரக்குச்சேர்த்து வுண்மையுடன் செம்பதுவாய் வுருகிநிற்கும்
நீதியாம் அயமதுதான்
செம்பேயானால் நிலைத்துதடா வாதவித்தை நிஜமதாச்சு
ஆதியாம் அயமதுனால்
சகலசித்தும் அப்போதே சித்தியடா தப்பேயில்லை
ஜொதியாங்
குருபரந்தன்னருளினாலே சுத்தமுள்ள அயத்தினுட செம்பைவாங்கே
விளக்கவுரை :

