போகர் சப்தகாண்டம் 1606 - 1610 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1606 - 1610 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1606. வாங்கியே செம்புநிகர் தங்கஞ்சேர்த்து வரிசையுடன் தானுருக்கி வைத்துக்கொண்டு
ஏங்கியே திரியாதே மைந்தாநீதான் இன்பமுடன் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
ஓங்கியே தானெடுத்து வுருக்கிப்பாரு வுறுதியாம் மாற்று பனிரண்டதாகும்
பாங்குபெற ஜொதிமயந் தன்னைக்காணில் பாலகனே சிவயோகம் பலிக்குந்தானே

விளக்கவுரை :


1607. தானான பொதிகைமலை வைப்புசொல்வேன் தாக்கான தென்பொதிகைதன்னிலோரம்
வேனான மடாலயமண்டபந்தான் வெளியான சுனைகரைகளங்குமுண்டு
பானான வாய்க்கால் மண்டபத்தில் படியோரம் வோராளின் மட்டந்தன்னில்
கோனான குருகூட்டம் சித்தர்கூட்டம் கோடான கோடிபொருள் வைத்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

1608. வைத்திட்ட திரவியங்கள் மெத்தவுண்டு மானிலத்தில் சித்தர்வைப்பு யார்தான் காண்பார்
கைத்திட்ட திரவியத்தை யெடுக்கவென்றால் கதவுடனே தாளனைத்து சீலுமாட்டி
மெய்த்திட்ட காப்பனென்ற காத்தராயன் மேல்வாசல் தனில்காவல் வீற்றிருப்பான்
மைத்திட்ட வடபுரத்தில் பூதங்காவல் மானிடர்கள் யாரேனுஞ் சொல்லார்பாரே

விளக்கவுரை :


1609. பாரேதான் திரவியத்து யெடுக்கவென்றால் பராசத்தியுட கிருபையதுபெறவேவேண்டும்
சீரேதான்னன்நடக்கை கொள்ளவேண்டும் சீர்தப்பி தீவிணையை யகற்றவேண்டும்
நேரேதான் மனோன்மணியாள் பூசைவேண்டும் நெறிமுறைமை தவறாத வருளேவேண்டும்
கூரேதான் சிற்பரத்தை நாடவேண்டும் கோடியுகந்தானிருக்க கற்பந்தேடே

விளக்கவுரை :


1610. தேடவே கையாளின் மூலிதானும் தெளிவான நற்கையாள் மூலிதானும்
கூடவே மேனியுட மூலிதானும் குணமான கஞ்சாவின் மூலிதானும்
நாடவே கருவேளிமூலிதானும் நலமான வெள்வேலி மூலிதானும்
சாடவே பேய்விரட்டி மூலிதானும் சாங்கமுடன் விரலியான் மூலியாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar