போகர் சப்தகாண்டம் 1611 - 1615 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1611 - 1615 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1611. மூலியாம் தைவேளை தழையுமாகும் முயலான கவுதும்பை தழையுமாகும்
பாலியாம் பாவட்டையி னிலையுமாகும் பாங்கான வாதண்டைத்தழையுமாகும்
சாலியாம் தும்பையிட யிலையுமாகும் சார்பான வழுதலையி னிலைதானாகும்
வேலியாம் பருத்தியுட மூலிதானும் வேரானகொடிவேலி தழையுமாமே

விளக்கவுரை :


1612. தழையான சங்கனிட மூலியாகும் தாக்கான புங்கனிட மூலியாகும்
மழையான பேய்ச்சுரையாம் பணிநாக்கோடு மகத்தான பாற்சரண்டினிலைதானாகும்
குழையான கொள்ளுக்கா மூலிதானும் கோடான சுழிமூலி நிலைதானாகும்
இழையான யிண்டிலையுனிலையுமாகும் மெழிலான கோறையுட யெலையுமாமே

விளக்கவுரை :

[ads-post]

1613. இலையான விஷமூலி யெலையுமாகும் எழிலான பம்பையுட பொன்முசுட்டை
தலையான பரட்டையுட மூலிதானும் தனியான குணமூலி வெளிச்சிமூலி
கலையான நக்கியென்ற மூலிதானும் கடிதான பற்பாட மூலிதானும்
வலையான சின்னியுட மூலிதானும் வகுப்பான குறுந்தொட்டி மூலியாமே

விளக்கவுரை :


1614. ஆமேதான் செந்தூரா மூலிதானும் அப்பனே கருவாளி மூலிதானும்
வேமேதான் விழிவிரட்டி மூலிதானும் வெடிப்பான காந்தியுட மூலிதானும்
போமேதான் மலைதாங்கி மூலிதானும் போக்கான சிறுதும்பை மூலிதானும்
தாமேதான் தீக்கோட்டான் மூலிதானும் தாக்கான சூரியென்ற மூலிபாரே

விளக்கவுரை :


1615. பாரேதான் தக்காளிகொன்றைமூலி பாங்கான வெண்ணொச்சியிலையுங்கூட்டு
சீரேதான் குட்டிவிலா மாவின்கொன்றை சிறப்பாக கூர்மல்லி பாளைதானும்
நேரேதான் வெவ்வல்லி பத்திரிதானும் நெடிதான வெள்ளல்லி மூலிதானும்
கூரேதான் பிரமராட்சதையுங்கூட்டி பேரான நற்றும்பை தானுங்கூட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar