போகர் சப்தகாண்டம் 1366 - 1370 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1366 - 1370 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1366. நான்தானே போகரென்றேன் காலாங்கிதம்மை நலமுடனே தானித்து தொழுதிட்டேனே
பாங்கான வென்மீதில் கிருபைவைத்து பாகமுடன் யோகத்துக்குறுதிசொன்னார்
மான்தோலி லாசனத்திலிருந்து மார்க்கமுடன் சித்தரைப்போ லுருவங்கொண்டு
மேன்மையுட னுபதேசம் யாவும்பெற்று மேதினியில் பிழைக்கவென்று வந்திட்டேனே

விளக்கவுரை :


1367. வந்திட்டேன் சீனபதிதன்னிற்சென்றேன் வாகுடனே கற்றதொருவித்தையெல்லாம்
தந்திட்டேன் மாணாக்கள் பிழைக்கவென்று தாரணியி லெந்தனைமெச்சியேதான்
குந்திட்டேன் சீனபதிமார்க்கமெல்லாம் குறிப்புடனே சாலமிகச்செய்தேன்யானும்
முந்திட்ட தேசாதிதேசமெல்லாம் முயற்சியுடன்றான் திரிந்து வந்தேன்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1368. பாரேதான் விளக்கொளிதான் கையிலேந்தி பாழ்கிணற்றில் செல்லுகின்ற பான்மைபோல
சீரேதான் சகலமுந்தானறிந்து சீர்தப்பி இருட்டுவழி செல்லல்போல
நேரேதான சகலமுந்தானறிந்து கெடிதான வித்தைகளைக் கற்றுமென்ன
கூரேதான் யோகத்தின் மார்க்கங்காணார் குவலயத்தில் கோடிபேர் காணலாமே

விளக்கவுரை :


1369. காணலாம் காயாதிகற்பங்கொண்டோர் காசினியில் விழலாகப்போனபேர்கள்
மாணவே சிவயோகந்தன்னிற்சென்று மாண்டிறந்தோர் கோடானகோடிபேர்கள்
தோணாத சரக்கெடுத்துச் சுழலைநடந்து கொல்லுலகில் மாண்டவர்கள் கோடாகோடி
காணவே சாத்திரங்கள் பார்த்துக்கெட்டு நலமழிந்து குறுக்குவழி போவார்தாமே

விளக்கவுரை :


1370. தாமேதான் நாகமது பலமேவாங்கி தாக்கான யிலுப்பைநெய்யில் வுருக்கிச்சாய்த்து
நாமேதான் கெந்தியொரு பலமேவாங்கு நலமான ரசமதுதான் பலமேதூக்கு
வேமேதான் பழச்சாறுதன்னாலாட்டி விருப்பமுடன் தானரைத்துக் கவசஞ்செய்து
போமேதான் ரவிதனிலே காயப்போடு பொங்கமுட னோட்டிலிட்டு சீலைசெய்யே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar