போகர் சப்தகாண்டம் 1371 - 1375 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1371 - 1375 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1371. செய்துமே குக்குடமாம் புடத்தைப்போடு சிறப்பான படமாறி யெடுத்துப்பாரு
நைதுமே களங்கினுட மார்க்கக்தன்னை நாதாக்கள் தங்களால் சொல்லப்போமோ
வெய்துமே களங்குடனே சூதஞ்சேர்த்து விருப்பமுடன் பரிசரியாய்க் கூட்டியேதான்
கொய்துமே தாளகமும் கணக்காய்க்கூட்டி கொப்பெனவே ஜெயநீரிலரைத்திடாயே

விளக்கவுரை :


1372. அரைத்துமே மேருவென்ற குப்பிக்கேற்றி அப்பனே வாலுகையிலெரித்துமேதான்
திரைத்துமே குப்பியைத்தான் சிலாகையிட்டுத் திறமுடனே பார்க்கையிலே சிவப்புமெத்த
யரைத்துமே செந்தூரப் பதனம்பண்ணு பாங்கான வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
முறைத்துமே தானுருக்கி குருவொன்றீய முதிர்வான மாற்றதுவும் எட்டதாமே

விளக்கவுரை :

[ads-post]

1373. எட்டான மட்டமது நாலதாகும் யெழிலான தங்கமது வொன்றுசேர்த்து
தட்டான மூசைதனி லுருக்கித்தீரு தாக்கான வாரடித்துப் புடத்தைப்போடு
கட்டான தங்கமது விரண்டுக்கொன்று கருவானபுடத்தங்கம் நயப்புகாணும்
கிட்டான வேதையிது சித்தர்வேதை கெடியான ரிஷிமுனிவர் செய்வார்தாமே

விளக்கவுரை :


1374. தர்மமாமிருதாரு சிங்கிசேர்தான் தயவான செவ்வாலம் பழந்தான்கொண்டு
பூமான தேங்காய்போல் அரைத்துருட்டிப் பொலிவான சிங்கியைத்தான் பொதிந்துமூடு
கரமான சீலையது வலுவாய்ச்செய்து கனமான புடமதுதான் போட்டாயானால் 
வேதான சிங்கியது கட்டிப்போடும் வெடியான யுப்பதுவும் கூடக்கூட்டே

விளக்கவுரை :


1375. கூட்டியே துருசுடைய சுன்னந்தானும் குணமான சிங்கியுடன் சமனாய்ச்சேர்த்து
மாட்டியே தானரைப்பாய் ஜெயநீராலே தாழ்வாகப் பில்லைதட்டிக் காயவைத்து 
மாட்டிகமா யோட்டில்வைத்துச் சீலைசெய்து மகிழ்ச்சியுடன் காயவைத்து புடத்தைப்போடு
நோட்டகமா யாறியபின் னெடுத்துப்பாரு கொடிதான செந்தூரங் காணலாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar