போகர் சப்தகாண்டம் 1376 - 1380 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1376 - 1380 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1376. காணவே செந்தூரம் களஞ்சிதூக்கு கருவான வெண்காரம் காற்கழஞ்சி
தோணவே இரண்டுமொன்றாய் தானரைத்து துப்புரவாய் ரவிதனிலே சரியாய்தூக்கி
மாணவே மூசைதனில் செம்புருக்கி மதிப்புடனே கிராசமது தானேயீவாய்
பாணம்போல் செம்பதுவு மூறல்நீக்கி பசுமைநிறம் செம்பொன்னு நிறமதாமே

விளக்கவுரை :


1377. நிறமான செம்பதனை யெடுத்துப்பார்க்க கெடிதான வூறலதுவற்றுப்போச்சு
திறமான தங்கம்நிகர் செம்புசேர்த்து திறலான மூசைதனிலுருக்கிப்பாரு
கறமான மாற்றதுவுமெட்டதாகும் கருவான வெள்ளியது கணக்காய்ச்சேர்த்து
உறவான வாறடித்துப் புடத்தைப்போடு உத்தமனே பசுமைநிறமாகுமாமே

விளக்கவுரை :

[ads-post]

1378. ஆமப்பா சொல்லுகிறேன் நிமிளைவேதை அப்பனே மாணாக்கள் பிழைக்கவென்று
தாமப்பா படிகமென்ற நிமிளைதன்னை தாரணியில் தேர்ந்தெடுத்து தாம்பரத்தில்
வேமப்பா சூதமது கூடச்சேர்த்து விருப்பமுடன் தானரைத்து தாம்பூரத்தில்
போமப்பா பழச்சாற்றில் அரைத்துமைபோல் பொங்கமுடன் சாந்தமதாய்ப் பூசிப்போடே

விளக்கவுரை :


1379. போடவே ரவிதனிலே காயவைத்துப் பொங்கமுடன் வகல்தனிலே வைத்துமூடி
நீடவே சீலையது வலுவாய்ச்செய்து நேர்ப்பான புடமதுதான் கோழியாக
காடவே கனலாறியெடுத்துப்பாரு கனமான செம்பதுவு மூறலற்று
மூடவே தங்கநிறம் போலேயாகும் முயற்சியாய் வேதையிது சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


1380. சொல்லவே செம்புதனை யெடுத்துப்பாரு சொக்கமுடன் சொகுசாவி நிறம்போலாகும்
வெல்லவே செம்புவித்தை யெவர்தான்செய்வார் வேதாந்த தாயினதுவருளினாலே
புள்ளவே குளிகையது பூண்டுகொண்டு புக்கினேன் தேசாதி வாந்தரங்கள்
செல்லவே யான்சஎன்று கற்றவித்தை ஜெகத்திலே மானிடர்கள் பிழைக்கத்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar