போகர் சப்தகாண்டம் 1381 - 1385 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1381 - 1385 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1381. பிழைக்கவே யின்னமொரு தயிலஞ்சொல்வேன் புகழான வராகமொன்று பிடித்துவந்து
குழைக்கவே துருசுடனே காரந்தானும் குணமான கெந்தியுடன் தாளகந்தான்
மழைச்சுவே லிங்கமது வீரந்தானும் மகத்தான பூரமுடன் கெவுரிவெள்ளை
தழைக்கவே துத்தமது சூதந்தானும் சார்பான சாரமது தானுங்கூட்டே

விளக்கவுரை :


1382. கூட்டவே சரக்கெல்லா மொன்றாய்க்கூட்டி குமுறவே குழியம்மி தன்னாலாட்டி
தாட்டிகமாய் தான்பொடித்து வராகந்தன்னில் தாக்காகத்தான் கீறித் தூவிதூவி
மாட்டிகமாய் வராகமதை சாடியிட்டு மதிப்புடனே மேல்மூடி சீலைசெய்து
நோட்டமுடன் மண்மறைவில் புதைத்துப்போடு நோக்கான மண்டலந்தான் சென்றுபாரே

விளக்கவுரை :

[ads-post]

1383. சென்றுபார் புழுவதுவும் மிகவேயாகி சீரான பரும்புழுவும் சிறியதாகும்
வென்றுபார் புழுவெடுத்து சீசாவுக்குள் விருப்பமுடன் தானடைத்து சீலைசெய்து
பன்றாக வென்னீரிற் பிடித்தாயானால் பாங்கான நீலநிறத் தயிலமாகும்
குன்றான தயிலமதை யெடுத்துப்பாரு கொற்றவனே டவனிலே தடவிப்போடே

விளக்கவுரை :


1384. போடவே செம்பினிலே தடவிப்போடு பொங்கமுடன் மாற்றதுவு யேழதாகும்
நீடவே வெள்ளிதனி லாறதாகும் நெடிதான மட்டமது வன்னியீறும்
கூடவே பொன்னதுவு மாற்றுமெத்தக் குணமான தயிலமது சொல்லப்போமோ
பாடவே போகரிஷி சொன்னமார்க்கம் பாங்கான மானிடர்கள் பிழைக்கத்தானே

விளக்கவுரை :


1385. பிழைக்கவே யின்னமொரு கருமானங்கேள் பேரான வங்கமது சேரைவாங்கு
தழைக்கவே பாஷாணசுருமாவோடு தாக்கான இரசமுடனே காடிக்காரம்
எழைக்கவே வறுவகை ஜெயநீர்தன்னால் ஏற்றமுடன் தானரைத்து வங்கத்தின்மேல்
குழைக்கவே பூசியதை தடவிப்பின்பு குமுறவே கரியோட்டில் பொதித்துமூடே  

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar