போகர் சப்தகாண்டம் 1386 - 1390 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1386 - 1390 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1386. மூடவே குக்குடமாம் புடத்தைப்போடு முனையான வங்கமது நீரைவாங்கி
நீடவே துய்யானுக் கொப்பதாகும் நெடிதான வித்தையிது சொல்லப்போமோ
கூடவே வெள்ளிதனை சிலவுசெய்து குறிப்பாக நிஷ்டையிலே யிருந்துகொண்டு
தேடவே சின்மயத்தை யாராய்ந்தோர்ந்து சிவானந்த கிரிதனிலே நின்றுதாக்கே

விளக்கவுரை :


1387. தாக்கவே கரிவங்கவெட்டைகேளும் தயவான தாளகமும் பலந்தான்வாங்கி
நோக்கவே மிருதாரு சிங்கிதானும் நொடிதாகத் தானரைத்து வங்கத்தின்மேல்
தேக்கான ரவிதனிலே காயவைத்து திறமாக வோட்டிலிட்டு சீலைசெய்து
போக்கான கோழஇயென்ற புடமேபோடு பொங்கமுடன் வெட்டையது யாகும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1388. பாரேதானிப்படியே புடமேபத்து பாங்காகப் போட்டுவர பலனைக்கேளு
சீரேதான் வங்கமது வெட்டையாகி சிறப்பாக சொருங்கியது மீறநிற்கும்
தூரேதான் வெட்டையது வொன்றேயாகும் துடியான செம்பொன்று வெள்ளியொன்று
நேரேதான் தானுருக்கி யெடுத்துப்பாரு நிலையான களங்கம்போலாகுந்தானே

விளக்கவுரை :


1389. தானான வெள்ளியென்ற களங்குதன்னை தாக்கான கரியோட்டி லூதிப்போடு
வேனான வெள்ளியது களங்குநீங்கி விருப்பமுடன் மாற்றதுவு மாறதாகும்
கோனான மட்டமது நாலுக்கொன்று குணமான தங்கமது வொன்றுகூட்டி
பானான மாற்றதுவு மிகுதியாகி பழுப்பான தங்கமது காணுந்தானே

விளக்கவுரை :


1390. காணவே வுப்புக்கும் காவிக்கேகா கனமான வங்கமது தங்கமாகும்
பூணவே ஜெகஜோதி தன்னைபார்த்துப் பொங்கமுடன் சின்மயத்திலிருந்துகொண்டு
வேணவே சுடரொளியின் லபியைப்பார்த்து மிக்கான வஷ்டாங்க யோகஞ்சென்று
ஊணவே குருபதத்தை வணங்கிப்போற்றி வுத்தமனே நடுமையம்பற்றிநில்லே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar