போகர் சப்தகாண்டம் 1391 - 1395 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1391 - 1395 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1391. நிற்கவே லிங்கமது பலமேவாங்கி நேரான முலைப்பாலால் சுறுக்குதாக்கு
கற்பமுடன் மேனிச்சார் நாலுசாமம் கருவான தும்பைசார் நாலுசாமம்
வற்கமுடன் பழச்சாறு நாலுசாமம் வாகான வரமுள்ளி நாலுசாமம்
சற்கமுடன் பழச்சாறு நாலுசாமம் சார்வான குமரிச்சார் சாமம்நாலே 

விளக்கவுரை :


1392. நாலான முசுக்கைசார் சாமம்நாலு நலமான தைவேளை சாமம்நாலு
காலான முள்ளங்கிசஃ சாமம்நாலு கறுத்ததோர் துளசியது சாமம்நாலு
பாலான மேதிப்பால் சாமம்நாலு பாங்கான தேங்காய்ப்பால் சாமம்நாலு
வேலான தேனதுதான் சாமம்நாலு விள்ளவே நெய்யதுதான் சாமம்நாலே

விளக்கவுரை :

[ads-post]

1393. சாமமாஞ் சுருக்குடனே கட்டிப்போகும் சார்வான லிங்கமது மெழுகிலோடும்
தாமமாஞ் சரக்குவகை சொல்லக்கேளு தளுக்கான வரப்பொடியுஞ் சிங்கிதானும்
காமமாஞ் சுருமாவுஞ் சாரந்தானும் கடிதான படிகாரம் யுப்புமாகும்
பூமமாம் வகைக்கொரு பலமேவாங்கு பொங்கமுடன் குழிக்கல்லில் பொடித்திடாயே

விளக்கவுரை :


1394. பொடித்துமே வறுவகை ஜெயநீர்தன்னால் பொங்காமல் தானரைப்பாய் சாமம்நாலு
துடுப்புனே தானரைத்து லிங்கந்தன்னில் தொகுப்பாகக் கவசித்துக் காயவைத்து
கடிப்புடனே காவிக்கற்சீலைசெய்து கருவாகக் குழிவெட்டி முழந்தாநீளம்
மடிப்புடனே வுமிகொட்டி லிங்கம்வைத்து மதிப்புடனே புடம்போடக் கட்டிப்போமே

விளக்கவுரை :


1395. கட்டியதோர் லிங்கமதை தானெடுத்துக் கணக்காக வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
திட்டமுடன் தான்கொடுத்து வுருக்கிப்பாரு தெளிவான மாற்றதுவும் ஏழதாகும்
நட்டமென்ன பத்திலோர் தங்கஞ்சேர்த்து நயமாக வாரடித்துப் புடமேபோடு  
சட்டமுடன் தானெடுத்து யெடுத்துப்பாரு சார்வான புடத்தங்க மாகும்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar