1396. பாரேதான் தங்கமதை சிலவுசெய்து பாசமென்னுஞ் சாகரத்தை விட்டொழித்து
சிரேதான்
கும்பத்திலிருந்துகொண்டு சிறப்புடனே வஷ்டாங்கஞ் சென்றுமேதான்
கூரேதான்
பீடமதிலிருந்துகொண்டு கோடானகோடிவரை மேலேயேறி
தீரேதான் சொரூபமென்ற கலையில்நின்று
தீவிரமாஞ் சுழிமுனையைப் பற்றியேறே
விளக்கவுரை :
1397. ஏறவே பூரமென்ற கட்டைசொல்வேன்
யெழிலான கேசரியின் பால்தானாழி
கூடவே சாமமது சுருக்குதாக்கு
குறிப்பான தொட்டியின் பாஷாணத்தால்
தேறறே வறுவகை ஜெயநீர்தன்னால்
தேற்றமுடன் தானரைத்து கவசஞ்செய்து
மாறவே ரவிதனிலே காயவைத்து
மார்க்கமுடன் புடம்போடக் கட்டிப்போமே
விளக்கவுரை :
[ads-post]
1398. போமேதான் குக்குடத்தில்
கட்டிப்போகும் போக்கான சரக்கதுவும் புகைத்துநிற்கும்
நாமேதான் சொன்னபடி
பூரக்கட்டை நலமாக மட்டமென்ற பொன்தகட்டில்
வேமேதான் வுமிநிரால்
தானிழைத்து விருப்பமுடன் தான்தகட்டில்பூசிப்பின்பு
காமேதான் காவிக்குள்
கீழ்மேலிட்டு கருத்தாக புடம்போடமாற்றமாமே
விளக்கவுரை :
1399. மாற்றான செம்பதனில்
தாக்கிப்பாரு மகத்தான செம்பதுவுங் களிம்புநீங்கி
கூற்றான கவளையதுபோலேகாணும்
குணமாகு பழுப்புநிறங் குன்றிக்காட்டும்
வேற்றான வெள்ளிதனில்
வாதோகொஞ்சம் விரைவான தேகமது காயகற்பம்
ஆற்றான வாயுவென்ற
தெண்பதும்போம் அப்பனே போகரிஷிகண்டதாமே
விளக்கவுரை :
1400. கண்டபடி மாணாக்காள்
பிழைக்கவென்று காசினியில் வெகுதூரம் சென்றுயானும்
கண்டபடி முறையெல்லாம்
பார்த்துத்தேர்ந்து காசினியில் பிழைப்பதற்கு வெகுவாய்ச் சொன்னேன்
கண்டபடி யெந்நூலை
மிகவும்பார்த்துக் கைகண்டமுன்னோரை நண்ணலாகி
கண்டபடி வுளவெல்லாம்
பார்த்துத் தேர்ந்து பாரினிலே செய்கிறவன்வாதியாமே
விளக்கவுரை :

