போகர் சப்தகாண்டம் 1406 - 1410 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1406 - 1410 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1406. தங்கமது பசும்பொன்னாம் வர்ணமொத்த தயங்காது காவிக்குமுப்புக்கேகா
அங்கமுடன் வாதத்துக் குறுதியாச்சு அப்பனே சித்தர்முனி செய்வாரப்பா
புங்கசித்தி ரெட்டுடனே பெறுவதாகும் போதமெட்டுங் கொள்ளுவதும் ஞானியாவான்
சிங்கமென்ற குருபீடம் பிரமபீடம் சிறப்பான சித்தருட மகிமைபாரே

விளக்கவுரை :


1407. மகிமையாம் துருசுடைய களங்குமார்க்கம் மகத்தான அவமுடனே வைதைபாரு
மகிமையா மயமதுவும் வொன்றேயாகும் மதிப்பான துருசதுவு மெட்டதாகும்
மகிமையா மிரண்டுமொன்றாய்ச் சேர்த்துக்கொண்டு மார்க்கமுட னமுரியினாலரைத்துக் கொண்டு
மகிமையாம் ஜலந்தனிலே கழுவிப்போடு மாசற்ற வயஞ்சேர்த்து சிவக்குந்தானே

விளக்கவுரை :

[ads-post]

1408. சிவப்பான வயஞ்சேர்ந்த துருசுதன்னை செழிப்புடனே சட்டிதன்னில் பரப்பிப்போடு
தவப்பான வாழைநீரதிலேவிட்டு தயவாக மூன்றுநாள் ரவியில்வைத்து
கயப்பறவே சூதமது நாலுக்கொன்று கலதவே தானரைத்து மறுசட்டிட்டு
நயப்புடனே மேற்சட்டி மூடிப்போடு நலமாக சீலையது வலுவாய்செய்யே

விளக்கவுரை :


1409. செய்துமே யடுப்பேற்றி யெரிப்பாய்சாமம் செழிப்புடனே யாறவிட்டு எடுத்துப்பாரு
நைதுமே செந்தூரமாகும்பாரு நலமான ரசமதுதான் மேலேயேறும்
கொய்துமே செந்தூரம் நாலுக்கொன்றி கொப்புடனே வெண்காரங் காலாய்க்கூட்டி
பெய்துமே மூசையிட்டு சீலைசெய்து பிலமாகக் காயவைத்து வுருக்கிடாயே

விளக்கவுரை :


1410. உருக்கியே செம்பான களங்குதன்னை வுத்தமனே வங்கமிட்டு வூதித்தீரு
நருக்கியே காரமிட்டு வுருக்கிப்பாரு நயமான செம்பதுவுமாகும்பாரு
பெருக்கியே வெள்ளியது நாலுக்கொன்று பேரான செம்பதுவு வொன்றேசேர்த்து
பருக்கியே தானுருக்கி யெடுத்துப்பாரு பதமான மஞ்சளது மட்டந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar