போகர் சப்தகாண்டம் 1411 - 1415 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1411 - 1415 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1411. மட்டமது வைந்துக்கோர் தங்கஞ்சேர்த்து மயங்காமல் வாறடித்துப் புடத்தைப்போடு
திட்டமுடன் மாற்றதுவு மிகவேயாகும் திறமான துருசுடைய களங்குவேதை
சட்டமதாய் கண்டருட வேதை மார்க்கம் சாற்றவுமெவராலு முடியாதையா
நட்டமில்லை யிவ்வேதை பரிசைவேதை நாதாக்கள் செப்புகின்ற மார்க்கம்பாரே

விளக்கவுரை :


1412. மார்க்கமாம் வேதையிது சுளுக்குவேதை மானிலத்தில் தவயோகிசெய்வாரப்பா
தீர்க்கமுடன் யோகநிலைதன்னிற்சென்று தெளிவாக சின்மயத்திலிருந்துகொண்டு
மார்க்கமுடன் பிராணநிலை சொரூபம்பற்றி பரகதிக்கு நன்மனதாய் வொடுக்கம்பார்த்து
சேர்க்கமுடன் திவ்யகலை தானிறுத்தி சிதம்பரத்தி னடனவொளி காணுவீரே

விளக்கவுரை :

[ads-post]

1413. காணவே யின்னமொரு மார்க்கங்கேளு கருவான காந்தமது ஊசிக்காந்தம்
பூணவே தேன்விட்டு வரைத்துமேதான் பொங்கமுடன் மூசையிட்டு வுருக்கித்தீரு
வேணவே சத்தெடுத்து சூதஞ்சேர்த்து விருப்பமுடன் கெந்தியது காலாய்க்கூட்டி
மாணவே வறுவகை ஜெயநீர்தன்னால் மாட்டாநாற் சாமமரைத்துப்போடே

விளக்கவுரை :


1414. போடவே ரவிதனிலே காயவைத்து பூப்போல தானுதிர்த்து பொடித்துமேதான்
நாடவே காசிபென்ற குப்பிகொண்டு நன்மைபெற சீலையது யேழுஞ்செய்து
கூடவே குப்பிக்குள் மருந்தையிட்டு குறிப்பாக பலபத்தின் கல்லால்மூடி
சாடவே ஈட்டிதனில் மணலைக்கொட்டிச் சார்புடனே குப்பிநடு மையம்வையே

விளக்கவுரை :


1415. வைத்துமே மணல்கொண்டு மேலேசெம்மி வளமாக சட்டிகொண்டுமூடிச்சீலை
சத்துமே போகாமல் தீயைமூட்டி சாங்கமாய்த் தானெரிக்க செந்தூரம்தான்
முத்தமுடன் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று முயற்சியுடன் தான்கொடுக்க மாற்றுங்காணும்
சுத்தமுட னூதிப்பார் மாற்றேயேகு சூட்சமுடன் போகரிஷிவறைந்ததாமே  

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar