1416. வரைந்தாரே மானிடர்கள்
பிழைக்கும்வண்ணம் வனாந்திரங்கள் குகைமுதலும் காணாற்கண்டு
துறந்தாரே குளிகையது
பூண்டுகொண்டு துறைகோடி மலைகளெல்லாம் கண்டாராய்ந்து
பறந்தாரே மேருகிரி
மேலேசென்று பாராதாட்சியெல்லாம் பார்த்துமெய்ச்சி
மறந்தாரே சித்தரிடம்
விடைகள்பெற்று மருத்துவத்தை வெளியாக்கி மதிப்பிட்டேனே
விளக்கவுரை :
1417. மதிப்பிட்டே னின்னமொரு கருமானங்கேள் மாசற்ற மனவிரும்பு பலமோவைந்து
கதிப்புடனே பொடிபொடியாய்
சன்னமாக கண்டிடைக்கு கெந்தியொரு பலமேபத்து
வெதுப்புடனே கையாளின்
சாற்றினாலே விளங்கவே நாற்சாம மரைத்தபின்பு
துதிப்புடனே பில்லைதட்டி
காயவைத்து துப்புரவாய் சட்டிதனில் பில்லைவையே
விளக்கவுரை :
[ads-post]
1418. வைத்துமே மேற்சட்டிக்
குமரிச்சாற்றால் வப்பமுடன் தான்மூடிசீலைசெய்து
வைத்துமே தானெரிப்பாய்
நாலுசாமம் மயங்காமல் எடுத்தப்பார் செந்தூரம்தான்
த்துமே செந்தூரந்தான்
தனையெடுத்து தயங்காமல் மறுபடியும் கையான்சாற்றால்
பொய்த்துமே போகாமல் செந்தூரத்தை
பொங்கமுடன் தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :
1419. நாலான செந்தூரம் பில்லைதட்டி
நலமாக ரவிதனிலே காயவைத்து
மேலான சட்டிதனில் தான்பரப்பி
விருப்பமுடன் பில்லைதனைமேலேவைத்து
பாலான சட்டிதன்னைக்
கவிழ்த்துமூடி பாலகனே முன்போலச் சீலைசெய்து
சீலான வடுப்பேற்றி நாலுசாமம்
சிவக்கவே தானெரிப்பாய் கமலமாமே
விளக்கவுரை :
1420. கமலந்தானெரிப்பா யானபின்பு
கருவாக யிப்படியே பத்துமுறைதானும்
விமலமாஞ் செந்தூரமிகவேசெய்து
விருப்பமுடன் குப்பிதனில் பதனம்பண்ணு
புமலமாய் செம்புருக்கி
நாலுக்கொன்று புகழுடனே செந்தூரங்கொடுத்தூது
தமலமாம் ரவிதானும்
கட்டிப்போகும் தாக்கடா மதிதனிலே நாலுக்கொன்றே
விளக்கவுரை :

