போகர் சப்தகாண்டம் 1421 - 1425 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1421 - 1425 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1421. ஒன்றான மதியுடனே ரவியுஞ்சேர்ந்து வுத்தமனே மாற்றதுவும் பழுக்கும்பாரு
நன்றான தங்கமது இரண்டுக்கொன்று நயமுடனே தான்கொடுத்து புடத்தைப்போடு
குன்றான பொன்னதுவு மேழதாகும் குணமான நயப்புடனே மின்னும்பாரு 
அன்றான வயத்தினுட போக்கைச்சொல்ல அரனாலு மயனாலஉ முடியாதென்றே

விளக்கவுரை :


1422. முடியான செந்தூரம் வேதைப்போக்கு முனிகோடி ரிஷிமுதலெலொர் சொல்வார்கோடி
வெடியான செந்தூரங்கொண்டபோது விருப்பமுடன் வாயுவென்ற தெண்பதுபோம்
தடியான தேகமதுமுருக்கேயேறி தாதுகளுமிகவலுத்து யிரத்தமுண்டாம்
குரியான சேத்துமத்தை யடுத்துப்போடும் குணமாகுந் தேகமது இருகும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1423. பாரேதா னின்னமொரு பற்பங்கேளு பாங்கான சிங்கியொருபலமேவாங்கி
சீரேதான் கோமியத்திலூதிப்பின்பு செழிப்புடனே பசும்பாலிலரைத்துமேதான்
நேரேதான் புடமதுவுங் கோழியாக நேர்ப்புனே தான்போட பற்பமாகும்
கூரேதான் பற்பமதுக்கிடையே சூதம் குறிப்பாகத்தான் சேர்த்தரைத்திடாயே

விளக்கவுரை :


1424. அரைக்கவே வாராதா ரச்சரக்கால் அப்பனே ஜெயநீராய்செய்துகொண்டு
திரைக்கவே நாற்சாம மரைத்தபோது திறமான பற்பமதுக் கிணைவேறுண்டோ
நிரைக்கவே பில்லைதட்டிக் காயவைத்து நிறமாகப் புடம்போடப் பற்பமாகும்
முறைக்கவே ஜெயநீரின் போக்கைச்சொல்வோம் முழுமக்களானவரு மறியத்தானே

விளக்கவுரை :


1425. அரியவே அராதாரச்சரக்கை அன்புடனே யாமுரைப்போமதீதமாக
தெரியவே காரமுடன் சாரந்தானும் திறமான துருசுடனே சீனந்தானும்
புரியவே வெடியுப்பு கரியுப்புமாகும் புகழான வித்தனையுமாராதாரம்
சரியவே மாணாக்காள் பிழைக்கவென்று சாற்றினார் போகரிஷிதன்மைபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar