1426. தண்மையாம் பற்பமது
பணமேதூக்கு சார்பான வெண்ணெயதுதன்னிற்கொள்ள
வண்மையாங் காயமது
இருகிப்போகும் வாகான தேகமது மின்னல்தோன்றும்
குண்மையாந் தங்கமது
வலுத்துப்போகும் குணமாக்கும் சிங்கியது கூறப்போமோ
நண்யாம் காயமது கற்றூனாகும்
நாதாக்கள் செய்முறைதான் உண்மைபாரே
விளக்கவுரை :
1427. உண்மையாம் வீரமது பலமேவாங்கு
ஓங்காரமுள்ளதொரு விலாங்கைத்தேடி
கண்மையாந்
தயிலமதுயிறக்கிக்கொண்டு கசடகற்றி தயிலமதை சுருக்குத்தாக்கு
பண்மையாம் நாற்சாமம்
வுறுக்குத்தாக்கு பளபளத்த வீரமது மெழுகுமாகும்
தண்மையாம் பரியதுவும்
பத்துக்கொன்று தாழ்ச்சியுடன் தான்கொடுக்க வாங்கும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
1428. வாங்கியதோர் மெழுகெடுத்து
பதனம்பண்ணு வரிசைபெற வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
ஓங்கியே கொடுத்தாக்கால்
ஏழுகாணும் உத்தமனே தொண்டுபண்ணி வேலைவாங்கு
பாங்குபெற மட்டமது
நாலுக்கொன்று பக்குவமாய்ப் பரியதுவும் மிகவேகூட்டி
தூக்கியே திரியாதே
மைந்தாகேளு சுத்தமுடன் செய்துமல்லோ வழலைபாரே
விளக்கவுரை :
1429. வழலையென்றால் வழலையது
சொல்லப்போமோ வளமாக நாதாக்கள் பாடிவைத்தார்
வழலையென்றால் சுந்தரனார்
வழலையல்ல வரரிஷியும் சொன்னதொரு வழலையல்ல
வழலையென்றால் மச்சமுனி
வழலையல்ல வன்பான சட்டமுனி வழலையல்ல
வழலையென்றால் கோரக்கர்
வழலையல்ல வான்மீகிர் பாடினதும் விழலையாமே
விளக்கவுரை :
1430. ஆமேதான் கொங்கணரும் வழலையல்ல
அப்பனே இடைக்காடர் வழலையல்ல
தாமேதான் டமரகனார் வழலையல்ல
தாக்கான சிவசிவாக்கியர் வழலையல்ல
வேமேதான் சூதமுனி வழலையல்ல
மிக்கான புஜண்டரும் வழலையல்ல
நாமேதான் சொன்னபடி
வழலைமார்க்கம் மற்றுமுள்ள சித்தரெல்லாம் பாடினாரே
விளக்கவுரை :

