போகர் சப்தகாண்டம் 1431 - 1435 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1431 - 1435 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1431. பாடினா ரிந்நூலில் சொன்னசித்தர் பழக்கமுடன் சொல்லவில்லை மறைத்துப்போட்டார்
பாடினார் பலபலவாந்துறைகள் சொன்னார் பக்குவங்கள் யாதொன்றுங்கூறவில்லை
பாடினார் அவரவர்கள் நூல்கள்தன்னில் பலபேர்கள் மறைப்புகளைக் காணவில்லை
பாடினார் துறைமுகமுஞ்சொல்லவில்லை பாடிக்கெட்டலைந்தார் கோடிபேரே

விளக்கவுரை :


1432. கோடானகோடிபேர் நூலைப்பார்த்து குவலயத்தில் கெட்டுவிட்டார் சொல்லப்போமோ
கோடானகோடிபேர் குறுக்குப்பாதை குணமுடனே செய்யாமல் மாண்டுபோனார்
கோடானகோடிபேர் காப்பேடுதள்ளி குடிகெட்டுப்போனார்கள் கணக்கேயில்லை
கோடானகோடிபேர் கடையேபார்த்துக் குலைநாசமடைந்தவர் கோடியாமே

விளக்கவுரை :

[ads-post]

1433. கோடியாந் தீட்சைவிதி யறியமாட்டார் கோலமுட னுப்பெடுக்கும் வகையுங்காணார்
தேடியதோர் பொருளெல்லாஞ் சிலவழித்து தேசம்விட்டு தேசம்போய் தெரியாமற்றான்
பாடியே சாத்திரத்தை பாடிக்கொண்டு பத்துபேரெட்டுபே ரொன்றாய்கூடி
நீடியே காலத்தை தெரியாமற்றான் நிட்சயமாய்ப் பூவெடுக்க போவார்பாரே

விளக்கவுரை :


1434. போவாரே கானகமெல்லாந்திரிந்து புக்காத நிலமெல்லாம் பூர்க்குமென்று  
ஆவலுடன் மலையோரம் பாறைபார்த்து வதுக்கப்பால் காதவழிசென்றுதாமும்
காவலுடன் நடுச்சாமவேலைதன்னில் கண்ணிருட்டுமுன்பாக மதிநேரத்தில்
காவலுடன்புலிகொண்டு யெழுத்தையோதி சமாதிகட்டித் தானிருந்தார் பலபேர்தாமே

விளக்கவுரை :


1435. பலபேராய்ச் சாத்திரத்தைக் கையிலேந்தி காப்பேடு கடையேடு தெரியாமற்றான்
சிலபேருங் கண்கெட்டு முழுதும்பார்த்து சூட்சாதி சூட்சமிடமறியாமற்றான்
மலமுடனே மூலபுளிமுப்பூவென்று மதிமயக்கந்தெரியாமல் தியங்கியேதான்
ஜலமுடனே கண்ணீருமாய் காலமதுதான் கழித்தார் கசடராமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar