1436. கசடகற்றி புத்தியள்ள
இளைஞரானால் காசினியி லெந்நூலைக்கருதிப்பாரார்
நிசமுடைய சாத்திரமெல்லாம்
அகற்றிநேரான சாத்திரங்கள் மெய்யென்றெண்ணி
விஷமுடைய முப்பூவின்
மண்ணினாலே வேண்டியதோர் வளையல்களும் செய்வார்கோடி
குசமுடையவளையல்
கார்க்காகார்காய்ச்சு மண்ணில் கூறவொண்ணா நஞ்சதுவு மிதக்கும்பாரே
விளக்கவுரை :
1437. பாரேதான்
எந்நூலைப்பாராவிட்டால் பாங்கான முப்பதுவுங் காணாவிட்டால்
சீரேதான் வளையற்காற்
நஞ்சானாலும் தீவரமாய்தானெடுத்து பூமுடித்தால்
நேரேதான் சரக்கெல்லாங் கட்டலாகும்
நிலையாத சரக்கெல்லாம் நிற்கப்பண்ணும்
நேரேதான்
வேதையிதுக்கோடும்வித்தை விழலாகப்போகாது வேண்டிச்செய்யே
விளக்கவுரை :
[ads-post]
1438. செய்யவே எந்நூலேழாயிரம்பார்
ஜெகத்திலே மறைத்ததெல்லாம் வெளியாய்ச்சொன்னேன்
பையவே சத்தகாண்டம்
பார்த்தாயானால் பாருலகில் நீயுமொரு சித்தனாவாய்
தொய்யவே பலபேர்கள்
முனிவரானோர் தொல்லுலகில் பாடிவைத்தார் நூல்கள்பேதம்
மெய்யவே பலதுறைகள்
பார்க்கவேண்டும் மேதினியில் நூல்பார்த்தோர் சித்தராமே
விளக்கவுரை :
1439. சித்தராம்
எந்நூல்போலாருஞ்சொல்லார் ஜெகத்தினிலே கோடானகோடிநூல்கள்
பத்தியுடன் நானுரைத்தேன்
மண்டலத்தில் பாகமுடன் எந்நூலைபார்த்தபேர்கள்
முத்தியுடன் காண்பதற்கு
வழியுங்காண்பர் மூவுலகும் கிட்டவல்லோ கதியுங்காண்பர்
சத்தியுடன் பராபரியை
தொழுதுபோற்றி சட்டமுடன் சத்தகாண்டம்பாடினேனே
விளக்கவுரை :
1440. பாடினேன் சத்தகாண்ட
மேழுகாண்டம் பாங்கான யெழுநூறவொன்றுசொன்னேன்
பாடினே னென்னூறுவைப்பு
சொன்னேன் பாங்கான திரட்டு வெழுநூறுசொன்னேன்
பாடினேன் முந்நூறு
வொன்றுசொன்னேன் பதிவான ஞானமொரு நூறுசொன்னேன்
பாடினேன் சோடசமு
மெட்டுஞ்சொன்னேன் பகரவே நிகண்டுவொரு நூலதாமே
விளக்கவுரை :

