1441. நூலான வாயிரத்திருநூறு சொன்னேன் நுணுக்கமாஞ் சொச்சங்கள னேகம்சொன்னேன்
பாலான வைநூறு கறுகிடையும்
சொன்னேன்பாலகனே யெந்நூல்போ லாறுஞ்சொல்லார்
சேலான சுருக்கிடையுங்
குருக்கிடையுஞ் சொன்னேன் சிறப்பான ஜோதிமுமந்நூறு சொன்னேன்
மூலான காலாங்கிநாயர்தம்மை
முடிவணங்கி யடியேனும் தொழுதிட்டேனே
விளக்கவுரை :
1442. மொழிந்திட்ட பாஷாணம்
பலமொன்றாகும் முனையான ரசமதுவும் வொன்றேயாகும்
வழிந்திட்ட பூரமது
பலமொன்றாகும் வாகான இம்மூன்று மொன்றாய்ச்சேர்த்து
எழுந்திட்டு கல்வமதில்
பொடித்துக்கொண்டு கருவான வறுவகை ஜெயநீர்தன்னால்
பிழிந்திட்டு தானரைத்து
பில்லைதட்டி பசகாமரவிதனிலே காயப்போடே
விளக்கவுரை :
[ads-post]
1443. போட்டுமே சட்டியிலே
பில்லைவைத்து பொங்கமுடன் மேற்சட்டி கவிழ்த்துமூடி
நீட்டமுடன் சீலையது
வலுவாய்ச் செய்து நேரானவடுப்பில்வைத்து யெரித்துநேராய்
வாட்டமுடன் நாற்சாமம்
யெரிக்கும்போது வளமான பற்பமது பதங்கமேறி
சட்டமுடன் மேற்பட்டி
மேலேநிற்கும் யெழிலான பற்பமது சொல்லப்போமோ
விளக்கவுரை :
1444. சொல்லவேபற்பமது தனையெடுத்து
சத்துள்ள செம்புதனில் பத்துக்கொன்று
மெல்லவே தானுறுக்கி
யெடுத்துப்பாரு வேதாந்த தாயினது வருளினாலே
புல்லவே செம்பதுவும்
வெள்ளியால் பூதலத்தில் மானிடர்கள் பிழைக்கவென்று
மெல்லவே போகரிஷிமனமுவந்து
மேதினியில் பாடிவைத்தா ருண்மைபாரே
விளக்கவுரை :
1445. உண்மையா மின்னமொரு
கருமானங்கேள் உரைக்கிறன் மாணாக்கள் பிழைக்கவென்று
யண்மையா மயமதுவும்
பலமொன்றாகும் தனியான பச்சையது பலமொன்றாகும்
கண்மையாம் ரசமதுவும்
பலமொன்றாகும் காரமாம் வெண்காரம் பலமொன்றாகும்
வெண்மையாம் வெடியுப்பு
ஜெயநீர்தன்னால் விருப்பமுடன் தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :

