போகர் சப்தகாண்டம் 1621 - 1625 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1621 - 1625 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1621. தானான வபினியது மயக்கமெத்தத் தாரணியில் நாதாக்கட்குகந்தபோதை
வேனான யிடுமருந்து பாஷாணந்தான் மிக்கான புத்திதனை மயக்கப்பண்ணும்
கோனான குருவருளா லிந்தபாகம் குணமாகப்பாடிவைத்தேன் மாந்தர்க்காக
தேனான காலாங்கி தன்னைப்போற்றி தேற்றமுடன் சதாகாலம் தவத்தில்நில்லே

விளக்கவுரை :


1622. நில்லவே போகரிட வுப்புமணியைக்கெளு நிலையான மணியதுவும் சித்தர்வேதை
புல்லவே சாகரத்தில் சலவேயாகும் போக்கான படிரண்டுவளந்துவாரு
கொல்லவே செர்த்துப்பு படியேவாகும் குணமான வளையலுப்பு படியேயாகும்
வெல்லவே விதுரண்டும் பொடியதாக்கி மேன்மையுடன் காச்சும்வகை செப்பக்கேளே

விளக்கவுரை :

[ads-post]

1623. செப்பவென்றால் ஜலந்தனிலே வுப்புக்கொட்டி சீலமுடன் தான்கரைத்து தெளிவைவாங்கி
ஒப்பமுடன் சீலையது வேடுகட்டி வுத்தமனே வடுப்பேற்றி யெரிப்பாயப்பா
தெப்பமுடன் நீரெல்லாம் சுண்டியேதான் தெளிவுபெற வுப்பதுவும் வட்டுப்போலாம்
நெப்பமுடன் தானிருக்கும் வுப்பைத்தானும் நேர்ப்பாக சரண்டியதை யெடுத்திடாயே

விளக்கவுரை :


1624. எடுத்துமே மறுசட்டிதானெடுத்து எழிலான கடல்ஜலம்தான் படிரண்டப்பா
தொடுத்துமே மறுபடியும் வுப்பைக்கொட்டி தொடரவே தான்கரைத்து வடிதான்கொண்டு
விடுத்துமே மேற்கவசம் சீலைகட்டி விருப்பமுடன் தானெரிப்பாய் சுண்டமட்டும்
கொடுத்துமே தானிறக்கி யெடுத்துப்பாரு குடிலமுடன் வப்பதுதான் கரடுமாமே

விளக்கவுரை :


1625. கரடான வுப்பதனை யெடுத்துக்கொண்டு கருத்துடனே மறுசட்டி கடல்ஜலந்தான்
பிரட்டாதே பின்னுமந்த சட்டிக்குள்ளே பெரான கடல்ஜலந்தான் படிரண்டிட்டு
வரட்டுடனே வுப்பையெல்லாம் சீவிவாங்கி வளமாக கடல்ஜலத்தில் கரைத்துக்கொண்டு
திரட்டுடனே வடிகட்டி யெடுத்துக்கொண்டு தீர்க்கமுடன் வடுப்பேற்றி யெரிப்பாய்நேரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar