போகர் சப்தகாண்டம் 1626 - 1630 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1626 - 1630 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1626. நேரான வுப்பையெல்லாம் சுரண்டிவாங்கி நேர்ப்புடனே மறுசட்டிதன்னிற்போட்டு
கூரான தீநெருப்பில் யெரிக்கும்போது குணமுடனே வுப்பெல்லாம் வுருகிக்கட்டும்
பேரான வுப்பதுவும் வயிரம்போலாம் பெரிதான வயிரமதையெடுத்துக்கொண்டு
சேரான மண்ணான சட்டிதன்னில் தெளிவுடனே காச்சியல்லோ மூசைக்கேற்றே

விளக்கவுரை :


1627. ஏற்றவே வுப்பதனைமூசையிட்டு யெழிலான தன்பதத்தி லிறக்கித்தீரு
போற்றவே கருகட்டி சிலைதான் வார்ப்பாய் புகழான சிலையதுவும் பாய்ந்தபின்பு
சீற்றமுடன் சிலையதுவும் சாரணிப்பாய் சிறப்புடனே மேனியென்னும் குப்பைமேனி
தேற்றமுடன் சார்பிழிந்து காய்ச்சி தோய்ப்பாய் தேர்மையுடன் சிலையதுவு மிருகும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1628. பாரேதான் சிலையதுவு மிறுகிக்காட்டும் பாங்கான லிங்கமுடன் துருசுதானும்
சீரேதான் கெந்தியுடன் தாரந்தானும் சிறப்பான சூதமுட னிடையாய்ச் சேர்த்து
வேரேதான் மூலியது விராலிதானும் வேகமுடன் தான்பிழிந்துசரக்கைமைந்தா
கூரேதான் மைபோலரைத்துபின்பு குணமான மருந்தையெல்லாம் சிலையிற்கேற்றே

விளக்கவுரை :


1629. சிலையான வுப்பினுட கெதையைமைந்தா சீர்பெறவே கவசித்துப் பூசிப்பின்பு
மலையான வோரமதில் தானேபூர்க்கும் மகத்தான பூநீறு கவசஞ்செய்து  
குலையான சித்தர்முனி ரிஷிகளில்லாக் கொலுக்கூடவனந்தனிலே புடத்தைப்போடு
விலையான வுப்பதுவும் சிவந்துமேதான் விண்ணுலகந்தான்மதிக்கு மதீதம்பாரே

விளக்கவுரை :


1630. அதிதமாங் கெதையதனை யெடுத்துமைந்தா அழகுபெற குகைவீட்டில் பதனம்பண்ணு
துவிதமு னுந்தனுக்கு வறுமைவந்தால் துடியான கெதையதனை சீவிமைந்தா
நதீதமுடன் செம்பதனில் நூற்றக்கொன்று நாட்டிவே மாற்று பனிரண்டாகும்
பதியான சித்தரமுனி செய்யும் வேதை பாருலகில் யார்செய்வார் நம்பிடாதே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar