போகர் சப்தகாண்டம் 1631 - 1635 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1631 - 1635 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1631. நிம்பயெண்ணெய் படியாழாக்கரண்டியிட்டு நினைவாக வெள்ளுள்ளி தாரங்கொஞ்சம்
தெம்புடனே விட்டெரித்து சூடுதண்ட திறமான பருவமதில் சிரசிலுற்று
துன்பமது சன்னிதனிற் பிரட்டல்போகுந் துடிப்புள்ள சலவைகளும் சொல்லாதோடும்
நம்பியிட்ட பயிர்போலே நலமதாகும் நாதாந்தமாக போகர்நவின்றிட்டாரே

விளக்கவுரை :


1632. கருத்துடைய மானிடர்க்கு பேதிகண்டால் கைக்கடக்கப் பிடியெடுத்து முளகாய்தன்னை
இரத்தியரை வெண்ணைபோல மூளைதன்னிலிதமாகப் பதித்திட்டுப் பின்புரியும்
பொருத்தமுள்ள வன்னிபற்பமுடனேதாக்கு பேருலகில் சன்னியற்று பிழைப்பார்பாரு
வருத்தமில்லை கைகண்டதொழிலுமாகும் வண்மையாம் போகமுனிவழுத்தினாரே

விளக்கவுரை :

[ads-post]

1633. பேதிகண்டவுடனே தான்பத்துஒத்து பேதமிலா வாக்கிறாணம் கலிக்கம்பற்பம்
நீதியாய் மாத்திரைக ளன்னப்போக்கு நிலையாக வொருநாளிற் செய்துகொள்ளு
ஜோதிபெற நாளிரண்டிற்செய்ய வேண்டாஞ் சுருக்கிலே குளுமைவந்து மூடிப்பொகும்
நாடிதா னில்லாமல் உயிரும்போகும் நலமான போகரிஷி நவின்றவாரே

விளக்கவுரை :


1634. நிம்பயிலையிடை யெட்டு வுரலிலிட்டு நேகயிடிபாணிரெட்டி சாலிலிட்டு
தம்பமற வெட்டிலொன்றாய்க் காச்சிக்கொண்டு தனையெடுத்து கிட்டிகட்டிப் பிழிந்துதன்னை
நிம்யிடு அரன்பீசப்பலமுமஞ்சு நிரம்பிட்டு ஓட்டியெரிக்குழம்பதாக
நம்பியெடு கல்வமிட்டு அரைசேர் காமம்நாடி யெடுமெழுகாகும் நாட்டுளோர்க்கே

விளக்கவுரை :


1635. ஈரவெங்காயமது கழச்சிக்கொட்டை யிலையிடித்து இரண்டெடையும் படியுமிட்டு
காரமுள்ள முத்தெண்ணெய் படியுமொன்று கருத்தறிந்த தந்திவிரை பலமுங்கால்தான்
கோலமுள்ள ரசமெழுகு பலமுங்கால்தான்கூட்டி யெரிவடிகட்டிப் பூசைசெய்து
பாரமுள்ள யெண்ணையது பணமும்வீதம் பாச்சிட நோய்தீரும் பரிசுகேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar