போகர் சப்தகாண்டம் 1636 - 1640 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1636 - 1640 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1636. பாரிந்த யெண்ணெய்தனை மூன்றுபோது பாச்சிடவே பாரிசமாஞ் சூலையெல்லாம்
சாரியந்தப் படியோடு மேகமெல்லாந்தாக்கி நெய்யடி படுங்காண் மகோதரங்கள்
கூறிந்தப் படிபோகும் வாதமெல்லாங் கொள்ளையது கொண்டாப்போ லோடிப்போகும்
சொரிந்த மேகவெட்டைநீர் களெல்லாம் சுவரிடுங்காண் வாயுவெல்லாம் சூட்சமாமே

விளக்கவுரை :


1637. சுவறிடுங்காண் பவுத்திரங்கள் மூலரோகஞ் சொல்லியநீராம்பல் துடிகள்போகும்
கவறதுபோலாகிவிடும் எண்ணைப்போக்கு கைகண்டு போகரிஷி கருத்தில்வைத்து
தவறிடாதெனக்குரைத்தார் லோகத்தோர்தான் பிழைக்கச்சொன்ன திந்தமார்க்கந்தன்னை
எவரிடத்தில் சொல்லாதே புளிப்புதள்ளு இனமாக வுண்வர்க்கு பிணிகள்போமே

விளக்கவுரை :

[ads-post]

1638. காரியெடை சேர்த்துமே கூடச்சேர்த்துக் காரண்டியிட்டு யிலுப்பைநெய்யி லுருக்கிமெள்ள
சாரியிட்டுப் பத்திரண்டு தரமுங்காச்சி சரியரவே கரண்டியிட்டு வுருக்கிமெல்ல
கூறியதோர் சூதமிட்டு வுருக்கத்தானே நாற்றமற முன்னெண்ணெய் நிறையவிட்டு
பாரியிது பத்துமது யெரியவிட்டுப் பாகமது யெடுத்து நிறையிடைபோகாதே

விளக்கவுரை :


1639. போகாதே அன்னமிட்டு வுடைத்துஅன்னம் புட்டியரைவில்லைகட்டு கிடத்திலிட்டு
பாகமாயெரித்திடவே யுயரவேறிப் பார்த்திடவும் எடுத்துவைத்து மடியில்நின்ற
தாகமாய் வில்லையரை சோறுவிட்டுத் தாக்கியே வில்லைகட்டி புடமூன்றிட்டால்
நாகமாம் வில்லையது சிவந்துபோகும் நாதாக்கள் சொன்னதிந்த நாட்டந்தானே

விளக்கவுரை :


1640. எறிகின்ற சூதமிடை புகைநீர்விட்டு எரியழலிற்ற பன்னிடம்வைத்துப்பாரு
கூறியதோர் காளாஞ்சி வந்தவில்லை கூட்டியரை புடமிட்டு எரிநேர்ப்பாக
மாறியெடு சிவந்துநிற்கும் ரவியில்நீறு மயமாகத் தாக்கிடவே யொன்றதாகப்
பாரியது ஏமமது பத்துமாகும் பாலித்தா ரிஷிபோகர் பண்பதாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar