போகர் சப்தகாண்டம் 1641 - 1645 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1641 - 1645 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1641. தேனிலிடு சகலநோயெல்லாந்தீருஞ் செங்கதிறாமேனியது இரும்புபோலாம்
வானிலே யிப்பாகம் பொய்யோவென்றால் வண்மையுள்ள ஆண்டவனும் பொய்யதாகும்
ஞானிகளுக்கிவ்வேதை யெறக்கமிட்டு நாட்டிலுள்ள நல்லவர்கள் செய்துகொள்வார்
கூறுநீமறாதவர்கள் செய்யமாட்டார் கொட்டிரைப்போமெப் போகர்மனமிதாமே

விளக்கவுரை :


1642. வீரமுடன் பதங்கபற்பம் பலமூம்நாலு வீதமிடை மிளகுசுக்கு தந்திகூட்டி
பாரமுள்ள நெல்லிமுள்ளி கடுக்காய் நேராய் பார்த்துஅரை புகைநீறார்சாமம்ரண்டு
கோரமதா யுத்தியளவாக வுண்டைகொடுத்து விடுமகோதரங்கள் முப்பத்தொன்றும்
நேரமில்லை யோடிவடும் நிமிஷந்தன்னில் நிட்சயமாய் போகரிஷி நேர்சொன்னாரே

விளக்கவுரை :

[ads-post]

1643. நல்லிரும்பு வோடையாம் செம்புநேரே நாட்டியரை பொடியாக குகையிலிட்டு
மெல்லவதை யுருக்கிவிட புட்டுபோலாம் விரும்பியெடு ரண்டுமுக்கால் நாத்தஞ்சூடன்
செல்லநிறுவிரண்டுமரை நிறுத்திக்கொள்ளு சிறுகவது வீரமது யிரண்டுகாலாம்
சொல்லவிந்த வைத்துடனே நிறத்துக்கல்வஞ் சுறுதியுடன் பாணிவிட்டு அரைத்துக்கொள்ளே

விளக்கவுரை :


1644. அரைத்துவில்லை யங்கியிடு பத்துந்தூமம் அதின்பேரு சுயமக்கினி யதைநிறுத்து
வரைத்து பலமொன்று நிறுவேலிவேறுவகை கடுகுஓமமொடு சிறுதேக்காகும்
நிறுத்திஎடு ஆனைத்திப்பிலி யிந்துப்பு நேரான கோஷ்டமொரு வகைக்குவொன்று
அரைத்துநிறு காயங்கால் வசம்புகாலாம் குணமான கடுகுபொடி அரையும்போடே

விளக்கவுரை :


1645. சங்குநிறம் சீரியதோர் சீனச்சுன்னம் சாதகமா யெடுத்துநேரே துடிசாற்றக்கேளு
இங்கிதமாய் வன்னிரசம் உப்பிலிட்டு இதமாக வெரித்திடவே பதங்கமேறும்
துங்கவதை யெடுநிறுத்துமுன் சுன்னவைத்து சுகமாகச்சேர்த்து கல்வமீதிட்டு
சங்கைபடப் பழச்சாற்றாற் சாமமாட்டி சதுறாககிடைத்திலிட்டு மூடிகேளே  

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar