போகர் சப்தகாண்டம் 1646 - 1650 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1646 - 1650 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1646. மூடியதைச் சீலைசெய்து எரிகால்சாமம் முத்தியதை யெடுத்துமண்டலமேயுண்ண
கோடியது நோயெல்லாம் குஷ்டம்போகுங் குணமாகும் வாதவெடி சூலைபோகும்
நாடியது மகோதரமுப்பதாகும் நாட்டிலுள்ள நீரிழிவு நடுங்கியோடும்
வாடிமுகங் கனவில்கண்ட விருள்போலாகும் வகையாக போகரிஷி சொன்னார்தாமே

விளக்கவுரை :


1647. வச்சிரத்தின் பாலாழாக்குப் பீங்கானிலிட்டு வசமாகமுற்றி வெள்ளைக்கரு நேரிட்டு
தச்செயலாய்த் திரிகால்வைமுரிந்து நீராந்தகைமைபெற எலிகொல்லி யோட்டிலிட்டு
வைச்சபடி முன்னீரால் சுருக்குயிட்டு வகையாக நாற்சாமம் போட்டுத்தீரு 
உச்சிதமா யண்டமென்ற சுண்ணங்கூட்டி யூரறியப் புடம்போடக்கட்டுந்தானே  

விளக்கவுரை :

[ads-post]

1648. கட்டுகின்ற பாஷாணங் கரியிலாடும் காதலாயெடுத்ததை வைத்துக்கொண்டு
வெட்டுநீ வெள்ளீய நூற்றுக்கொன்று விரும்பியிடு ரசிதமாய் நீர்களற்று
தட்டுநீ நாதம்வரும் கடையில்விற்று தகமையுள்ள ஞானத்தை தரித்துக்கொள்ளு
பட்டுநூற் சாயம்போற் பாகம்பாரு பதிவான போகரிஷி பாலித்தாரே

விளக்கவுரை :


1649. சடைக்கஞ்சாய் நூறுசட்டிலிட்டு ஜலம்விட்டு திரிநாள்வை யலம்பிவாங்கி
திட்டமாகப் பின்னுமொரு சட்டியிட்டு சீறாவின்பால்படியும் பாணிநேரே
விடையாக விட்டெரி நீக்கோணியிட்டு இதமாகப்பிழிந்து ரசம்வாங்கிப்பின்பு
கிடமிட்டு ஆவின்நெய் சிறுகவிட்டு கிருபையாய் வைத்துநீ பகரக்கேளே

விளக்கவுரை :


1650. சக்கரையின் சுக்கேலமிளகுமாஞ்சி சாதிக்காய் பத்திரியுங் கிராம்புகோஷ்டம்
மிக்கஅதிமதுரமுடன் அமுக்கறாவும் விதமான வாள்மிளகு கசகசாவும்
தொக்கவகை பலமிரண்டு தட்டியிட்டுச் சுருதியெனும் பாலிலிட்டுப் பாகாய்க்காச்சி
பக்கமுள முன்ரசத்தை யதிலேயிட்டுப் பாகமாயிறுக பதம்பார்த்துக்கேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar